வியாழன், 9 டிசம்பர், 2010

இதுவே உமக்கு பிரியம்! (HIS GOOD PLEASURE)

            சுத்த இருதயமா (சங். 51: 10) ? நொறுங்குண்ட இருதயமா (சங். 51: 17) ? இவைகளில் தேவா, உமக்கு எது பிரியம்? என கேள்வி தொடுக்கப்பட்டால், அதற்கு தேவன் தரும் பதில் "நொருங்குண்ட இருதயமே எனக்குப் பிரியம்" என்பதாகவே இருக்கும்1 (சங். 51:18) ஏனெனில், சுத்த இருதயம் பெற்று வாழ்பவர்கள், நொருங்குண்ட இருதய வாழ்விற்குள் வராமலே இருந்திட முடியும். சுத்த இருதயம் கொண்டவர்கள் தேவனை தரிசிப்பார்கள் அல்லது காண்பார்கள் என்பது நிஜம்தான்! (மத். 5:8) ஆகிலும் நொருங்குண்ட இருதயம் பெற்றவர்களோ தேவனுக்கு சமீபமான ஐக்கியம் பெறுவார்கள்!(சங்.34:1)                                                                                                                                                                                                                                                                                                                                                நம்மோடு ஐக்கியம் கொள்ளும்பொருட்டே தேவன் நம்மை சிருஷ்டித்தார்! அதுவே அவருக்கு பிரியம்!! ஆனால், சுத்த இருதயத்தைக் கடந்து "நொருங்குண்ட வாழ்க்கைக்கு" எத்தனைபேர் "மனப்பூர்வமாய்" பிரியம் கொள்வார்கள்? என்பது இன்றும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது! ஏனெனில் அதற்கு ஒரு பலிபீடம் வேண்டும்! எதற்கு? அதில் தானே பலியாவதற்குத்தான்!! இந்த ஊக்கமான நெஞ்சுறுதி அல்லது ஓங்கிய விசுவாசமே இன்று அரிதாய் காணப்படுகிறது!                                                                                                                                                                                                                                                                                                     "இதோ உம் சித்தம் செய்ய வருகிறேன்" என இந்த பூமிக்கு மனுபுத்திரனாய் இயேசு ஒரு சரீரத்தோடு வந்த அடுத்த கணமே, தன் பிதாவுக்கு பிரியமானதைச் செய்திட நாடினார்! "இயேசுவைக்குறித்து" புத்தகச் சுருளில் தேவன் எழுதி வைத்த நோக்கமும் இதுதான்! (எபி. 10:7) இந்த நோக்கத்தின் பின்னணி யாதெனில், தன் குமாரனோடு ஐக்கியம் கொள்ளவேண்டும் என்ற அவரது பிரியம்! நாசரேத் தொடங்கி, கல்வாரி வரை, அவர் வாழ்வின் 33 1/2 வருட ஜீவியமும் ஒரு பலிபீடத்தின் ஜீவியம்தான்! அவருடைய "சரீரம் பிட்கப்பட்டதற்கு" அல்லது அவரது சரீரம் "நொறுக்கப்பட்டதற்கு" காரணம், பிதாவுக்கு பிரியமான "அவரோடு ஒன்றான ஐக்கியம் பெறுவதற்கே ஆகும்!                                                                                                                                                                                                                அசட்டை பண்ணப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், துக்கம் "நிறைந்திருப்பதும்" பாடு அனுபவிப்பதும், ஒடுக்கப்படுவதும், கள்ளர் மத்தியில் ஒருவராக்கப்படுவதும்....... கர்த்தருக்குப் பிரியம்! (ஏசாயா 53:7-10) ஏனெனில், இங்குதான் கர்த்தருக்குப் பிரியமான தாசன், அவரை அறிந்து நெருங்கி வாழும் ஐக்கியம் பெறுகிறான்! (ஏசாயா 53:11). இதே ஐக்கியத்தைத்தான் தன் சீஷர்களும் பெற்றிட இயேசு வாஞ்சித்தார்! ஏனெனில், இந்த ஐக்கியத்தை பெற்ற யாவருமே ஒருவரோடொருவர் தெய்வீக ஐக்கியம் கொள்வது தானாகவே மலர்ந்து விடும்! "நான் உம்மோடும், அவர்கள் நம்மோடும்" என இயேசு குறிப்பிட்ட "தேறின ஐக்கியத்தை" கண்டடைவார்கள்! (யோ. 21:23).                                                                                                                                                                                                                                   தன் சுத்த இருதயம் தொடங்கி... இந்த நொருங்குண்ட இருதயம் வரை பெற்றிடும் கல்வாரிப் பயணத்திற்கு யார் ஆயத்தம்? மெய்யான "கர்த்தருடைய மேஜை" அங்குதான் உள்ளது. "ஆதமின் (அல்லது நமது) ஜீவன்" சிதைந்து "கிறிஸ்துவின் ஜீவன்", அவரது மகிமை அல்லது திவ்ய சுபாவப் பரிமாற்றம் இங்கேதான் சம்பவிக்கிறது! "நானே ஜீவன்" என்றவரோடு ஐக்கியமும் இங்குதான் பரிமளிக்கிறது! ஆம், அனுதினமும் அவரது மேஜையில் அமர்ந்து புசித்து, ஐக்கியம் கொள்ளும் பாக்கியவான்கள் இவர்களே! ஓ கர்த்தாவே, இதுவே உமக்குப் பிரியம்.... இதுவே எமக்கும் பிரியம்!!                                                                                                                                                                                                                                                                            T. ரத்தினகுமார் 

2 கருத்துகள்:

chillsam சொன்னது…

// தன் சுத்த இருதயம் தொடங்கி... இந்த நொருங்குண்ட இருதயம் வரை பெற்றிடும் கல்வாரிப் பயணத்திற்கு யார் ஆயத்தம்? மெய்யான "கர்த்தருடைய மேஜை" அங்குதான் உள்ளது. "ஆதமின் (அல்லது நமது) ஜீவன்" சிதைந்து "கிறிஸ்துவின் ஜீவன்", அவரது மகிமை அல்லது திவ்ய சுபாவப் பரிமாற்றம் இங்கேதான் சம்பவிக்கிறது! "நானே ஜீவன்" என்றவரோடு ஐக்கியமும் இங்குதான் பரிமளிக்கிறது! //

அற்புதமான கவித்துவமான வரிகள்...பாராட்டுகள் நண்பரே..!

N.B:
உங்களைத் தொடரும் வாய்ப்பு (follow) தங்கள் வலைப்பூவில் கொடுக்கப்படவில்லையோ..? கவனிக்கவும்.

தயாளன் சொன்னது…

நனறி சகோதரரே! இது நான் எழுதியது அல்ல. சகோ. T. ரத்தின குமார் அவர்கள் எழுதியது. இது போன்ற செய்திகளைப் படிக்க cfcindia.com/tamil என்ற தளத்தைப் பார்க்கவும். நான் உங்கள் வலைத்தளங்களை தொடர்ந்து படித்துவருகிறேன். N.B பற்றி கவனிக்கிறேன். நன்றி.