புதன், 23 மார்ச், 2011

வேத வசனமா? சொந்த அபிப்பிராயமா? (GOD'S WORD OR OWN PRESUMPTION?) -எலியாஸ் அஸ்லாக்சன்



         நாம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவைகளை அப்படியே விசுவாசித்து, அதற்கொப்பாகவே மறுரூபப்படவேண்டும்! நாம் நினைப்பது... அபிப்ராயப்படுவது... ஆகிய யாவும் மதியீனமேயாகும். வேதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ? அவைகள் மாத்திரமே நூற்றுக்கு நூறு சரியானதாகும்! உதாரணமாய், நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் உபத்திரவமே... உள்ளது என 2கொரிந்தியர் 4:17 மிகத் தெளிவாகக் கூறுகிறது. இதை அப்படியே விசுவாசித்து விட்டால், நமக்கு வரும் எந்த உபத்திரவமும் அதிசீக்கிரத்தில் நீங்கும் மிகச் சுருக்கமான உபத்திரவமேயாகும்!

இன்னும் என்ன?  “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான (light) நம்முடைய உபத்திரவம்! எனவும் இந்த வசனம் கூறுவதைப் பாருங்கள். இது என்ன... அச்சுப்பிழை ஏற்பட்டுவிட்டதோ? நமக்கு ஏற்படும் ஏராளமான உபத்திரவங்களும் பரீட்சைகளும் "லேசானது" என எழுதப்பட்டிருக்கிறதே நாமோ அவைகளைப் பாரமானது (heavy) என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தோம்? சரிதான், இப்போது புரிந்து விட்டது, அவை யாவும் நம்முடைய சொந்த அபிப்ராயங்கள்தான்!

 நீங்கள் எழுதப்பட்ட வார்த்தையை அப்படியே விசுவாசிக்காமல், உபத்திரவங்களைத் தவறான முறையில் கையாண்டு, "பாரமான உபத்திரவத்தை உற்பத்தி செய்து விட்டீர்கள்! 
     நீங்கள் என்னத்தை  அபிப்பிராயப்பட்டீர்களோ அல்லது எண்ணினீர்களோ அவைகளைத்தான் விசுவாசித்துவிட்டீர்கள். இன்று ஓர் உண்மையைக் கேளுங்கள்... உங்கள் நினைவும், அபிப்பிராய உணர்ச்சிகளும் தவறு!

இனி தொடர்ந்து கவனியுங்கள், "நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான (அளவிற்கடங்காத) நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" (2 கொரிந்தியர் 4:17) என்றல்லவா சத்திய வேதம் முழங்குகின்றது! கைமேல் கிடைக்கும் இந்த பிரதிபலன்கள், உங்களில் யாருக்காவது கஷ்டமாகத் தோன்றுகிறதா? இல்லையே...! ஆம், சத்திய வசனம் சொல்வது மாத்திரமே உண்மை, பிற அனைத்தும் பொய்... கவனம்!!

விசுவாசிகள் என சொல்லிக் கொள்ளும் நாமோ "நீண்ட உபத்திரவம்... பாரமான உபத்திரவம் துயரமான நசுக்கும் உபத்திரவம்..." என்றெல்லாம் புளுங்கித் தவிக்கிறோம்.. இப்படியெல்லாம் நீங்கள் புளுங்குவதும்... தவிப்பதும்.......வேதத்தில் எங்கேயாவது எழுதியிருக்கிறதா? இன்று ஜனங்கள் வேதத்திற்கு முரணான காரியங்களைச் செய்துகொண்டு, தலைக்குமேல் கஷ்டத்தை சுமக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கையில் ஒரு கஷ்டமும் இல்லை என நான் கூறிட முடியும். ஆம், ஒன்றுகூட இல்லை! இதன் இரகசியம் யாது தெரியுமா? எழுதப்பட்ட வார்த்தையை அப்படியே விசுவாசிப்பதற்கும், நான் எங்ஙனம் நடந்துகொள்ள வேண்டும் என வேதம் கூறுகிறதோ அங்ஙனமே நடப்பதற்கும் ஏற்ற கிருபையை என் வாழ்க்கையில் பெற்றிருக்கிறேன், இதுவே அந்த இரகசியம்!

 - எலியாஸ் அஸ்லாக்சன்

கருத்துகள் இல்லை: